search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலகிருஷ்ணா ரெட்டி"

    பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection

    சென்னை:

    ஓசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

    அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.


    தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர். #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SupremeCourt #BalakrishnaReddy
    சென்னை:

    பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

    ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரை குற்றவாளியாக அறிவித்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பினால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார். அத்துடன், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

    இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார்.



    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆஜராகி, ‘பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணரெட்டி 72வது குற்றவாளி ஆவார். யாரோ செய்த தவறுக்கு, இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது.

    இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பு மூலம் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #BalakrishnaReddy
    3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார். #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy
    சென்னை:

    பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வரும் தனிகோர்ட்டு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


    மேலும் அவரது சார்பில் வக்கீல் டி.செல்வம் ஆஜராகி இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார்.

    இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy 
    பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
    சென்னை:

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது, செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #BalakrishnaReddy #Sengottaiyan
    ×